background img

The New Stuff

muller

த மாலை நேர ஜெபக்கூட்டம் ஹெர் வாக்னர் என்பவரின் வீட்டில் நடைபெற்றது. அவரது வீட்டிற்கு தான் வருவதை அவர் ஒரு வேளை விரும்பமாட்டார் என்று முல்லர் ஆரம்பத்தில் நினைத்தார். அவரது வீட்டிற்கு சென்றதும் முல்லர் தனது வருகைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார். அவருடைய வார்த்தையைக் கேட்டு ஹெர் வாக்னர் புன்னகை புரிந்தார்.
"உங்கள் விருப்பம்போல அடிக்கடி இந்த வீட்டிற்கு வாருங்கள். எங்கள் வீடும், எங்கள் இதயமும் உங்களுக்காக எப்பொழுதும் திறந்திருக்கின்றது. இப்பொழுது நீங்கள் வந்து எங்களுடைய ஜெபத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று ஹெர் வாக்னர் முல்லரை அன்புடன் அழைத்தார்.
அவர்கள் ஒரு பாமாலைப் பாடலைப் பாடினார்கள். அதற்கப்பால் ஹெர் கெய்சர் என்பவர் (இந்த தேவ மனிதர் பின் நாட்களில் லண்டன் மிஷனரி சுவிசேஷ சங்கம் சார்பாக ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் சென்றவர்) முழங்காலூன்றி கூட்டத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதம் வேண்டி உள்ளம் உருகி ஜெபித்தார். முல்லர் இதுவரை எவரையும் முழங்காலில் நின்று ஜெபிப்பதை பார்க்காததுடன் அவரும் முழங்காலூன்றி ஜெபித்ததும் கிடையாது.
ஹெர் கெய்சர் வேதாகமத்திலிருந்து ஒரு அதிகாரத்தை வாசித்ததுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரசங்கத்தையும் வாசித்தார். அந்த நாட்களில் ஜெர்மானிய சட்டப்படி ஒரு குருவானவரை தவிர மற்ற சாதாரண கிறிஸ்தவர்கள் வேதாகமத்தை மக்களுக்கு விளங்க காண்பிப்பதோ அல்லது பிரசிங்கிப்பதோ குற்றமாகும். கூட்ட முடிவில் ஒரு ஞானப்பாடல் பாடினதும் ஹெர் வாக்னர் ஜெபித்து கூட்டத்தை முடித்தார். அவர் ஜெபிக்கும்போது முல்லர் தனது மனதுக்குள்ளாக நான் இந்த மனிதரைவிட அதிகமாகப் படித்திருக்கின்றேன் நான் கூட இவரைவிட நன்றாக ஜெபிக்கலாமே என்று நினைத்துக் கொண்டார்.

0 comments:

Post a Comment

Popular Posts